Tuesday, October 15, 2013

குறும்பு


தெரிந்தாலும் தெரியாதது போலத் தான்
நடந்து கொள்கிறேன்...
பின்னிருந்து என் கண்களை மூடி
யாரென நான் சொல்லும் வரை
அமைதி காக்கும் அவள் குறும்பு...
உன் கொலுசுகளின் சிணுங்கல்களும்
கூந்தலின் வருடல்களும்
நீ தான் என காட்டிக் கொடுத்து விடாதா பெண்ணே !!!!
ஆனாலும் உன் அருகாமை இன்னும் நீளட்டுமென்று
நானும் அமைதியாய் மூடிய கண்களோடு
ரசிக்கிறேன் – குறும்பையும் குழந்தைத்தனத்தையும்....

No comments:

Post a Comment