பெண்மை போற்றும் பெருநாளென ஒருநாள்..
ஓர்நாளில் தொடங்குவதோ முடிவதோ இல்லையது..
தினம்தோறும் காட்டட்டும் வாழ்வு அது..
காவியத்தின் பொருளாயும் வேண்டாம் அவள்,
காமத்தின் பொருளாயும் வேண்டாம் அவள்.
ஆணும் பெண்ணும் எதிர்பதம் அல்லவே,
ஒன்றிற்கொன்று இணைபதம் அன்றோ அது..
அவனும் அவளும் நிகர்தானே சொல்க..
உன்போல் கனவும் காதலும் கருணையும்
ஆசை லட்சியம் தைரியம் திமிரும்
அவளுக்கும் உள்ளதொரு மனம் அறிவாயோ..
பெண்மையிலும் ஆண்மையுண்டு அது போலே
ஆண்மையிலும் தாய்மையுண்டு உணர்வாயே நீ..
திங்களாயும் வேண்டாம் தெய்வமாயும் வேண்டாம்
பெண்ணைப் பெண்ணென மதித்தால் நினைத்தால் போதும்..
õ இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் õ
- உங்களுக்கும் நீங்கள் அறிந்த பெண்கள் அனைவருக்கும்...
Why is it just today!Only a day to value woman..It doesnt start or end in a single day,but should reflect in your daily!Let her not be considered as an epicor just your toy for lust or love!Why Men and women are opposite sex - can’t they be considered equivalent sex!Like he and she are equivalent to each other..She too have little dreams, love, kindness,eagerness, aspiration, braveness, and a heart with feelings..so much like you have within yourself..Man is a part of woman, says the word itself.See woman & man are bound to each.She dont want to be treated - neither like the moon in a poetrynor like the goddess in the temple.She just deserves to be treated like a woman!
Happy International Women’s Day!
To you and to every woman you know..



No comments:
Post a Comment