தெரிந்தாலும் தெரியாதது போலத் தான்நடந்து கொள்கிறேன்...பின்னிருந்து என் கண்களை மூடியாரென நான் சொல்லும் வரைஅமைதி காக்கும் அவள் குறும்பு...உன் கொலுசுகளின் சிணுங்கல்களும்
கூந்தலின் வருடல்களும்
நீ தான் என காட்டிக் கொடுத்து விடாதா பெண்ணே !!!!
ஆனாலும் உன் அருகாமை இன்னும் நீளட்டுமென்று
நானும் அமைதியாய் மூடிய கண்களோடு
ரசிக்கிறேன் – குறும்பையும் குழந்தைத்தனத்தையும்....
கைகள் கோர்த்து கரையில் நிற்கும் பொழுதுகளில்...
தழுவ வரும் அலைகள்,அவள் கால்களை தொட முயன்று தோற்கின்றன...ஏ அலையே! எந்தன் கண் முன்னே நீ அவள் பாதம் தொட்டால்..உன்னிடம் கூட கோபம் கொள்வேன் என்று தானே பின் வாங்குகிறாய் ?
மழை வருமென குடையெடுத்து வரச்சொல்கிறாள்..மறந்து செல்கிறேன் வேண்டுமென்றே..அக்கறையாய் துவட்டி விடும் விரல்கள், மறதியை மன்னிக்காது திட்டும் உதடுகள்,முழுதாய் நனைந்து வாசம் வீசும் கூந்தல்,துப்பட்டாவில் குடை பிடிக்கும் கைகள்,மேனி தொட்டு தெரிக்கும் மழைத்துளிஇவை வேண்டுமென்றே மறந்து செல்கிறேன் குடையை...
என்தலை நனைத்த மழையின் ஈரம் துவட்ட..
நான் துரத்தும் பொழுது என் குழந்தை ஒளிந்து கொள்ள..
அவள் வேலை செய்து வியர்க்கையில் நான் துடைத்து விட..
தூங்கும் என் குழந்தைக்கு தொட்டிலாய், எனக்கு மட்டும் போர்வையாய்..
இருந்தது... சேலை என்று ஒன்று...
இன்று அந்த இடத்தை பிடித்து கொண்டிருக்கிறது
# சுடிதாரின் துப்பட்டா...